Tamil Angadi

Tamil Angadi

This is best all lifestyle things.you can learn here.
 
HomeHome  CalendarCalendar  FAQFAQ  SearchSearch  MemberlistMemberlist  UsergroupsUsergroups  RegisterRegister  Log inLog in  
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Keywords
Latest topics
May 2018
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
CalendarCalendar
Top posting users this week

Share | 
 

 உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா? இத சரியா பண்ணுனாலே போதுமே!

Go down 
AuthorMessage
Admin
Admin


Posts : 64
Join date : 2017-11-19

PostSubject: உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா? இத சரியா பண்ணுனாலே போதுமே!   Tue Nov 21, 2017 12:22 pm

[You must be registered and logged in to see this image.]

முகம் என்ன தான் அழகாக இருந்தாலும், கூட முகத்தின் அழகை எடுத்து காட்ட உதவுவது அழகிய உதடுகள் தான். உதடுகளின் வண்ணமும், உதடுகளில் பளபளப்பும் இருந்தால், உங்களது முகத்தின் தோற்றமே மேம்படும். சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில பழக்கங்களால் ஏற்படுகிறது. இந்த பகுதியில் உங்களது வறண்ட உதடுகளை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி காணலாம்.

1. வெண்ணெய்:


வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடாகும்.

2. கொத்துமல்லி

கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

3. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.

4. பீட்ரூட்

பீட்ரூட் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். மாதுளம் பழத்தின் சாறும் உதடுகளை அழகாக்கும்.

5. பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி உதடுகளை மென்மையாக்க உதவும் மிக சிறந்த பொருளாகும். தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

6. ஒத்தடம்

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

7. கடித்தல்

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

8. இது வேண்டாம்!

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவது தான் உபயோகிக்க வேண்டும்.

9. தரமான லிப்ஸ்டிக்

விலையை கருத்தில் கொள்ளாமல் தரமான லிப்ஸ்டிக்குகளை தான் பயன்படுத்த வேண்டும். தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கறுத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

10. சுத்தம்


10. சுத்தம்

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

11. இரவு!

உதடுகளின் அழகை பராமரிக்க இரவு நேரம் மிகச்சிறந்தது. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

12. அழகை மேம்படுத்த..

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

13. முட்டை

முட்டையில் உள்ள மிகச்சிறந்த ஊட்டச்சத்துகள், உதடுகளை காப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

14. நெய்

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

15. பாதாம்

முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

16. ஆலிவ் எண்ணெய்

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

17. கொத்தமல்லி

அழகை பராமரிப்பதில் நாம் தினசரி பயன்படுத்தும் கொத்தமல்லிக்கு மிக சிறந்த இடம் உள்ளது. கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

18. தேங்காய் எண்ணெய் :

உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை நீக்க சுத்தமாக நீக்க வேண்டுயது அவசியம். உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

19. ஐஸ் கட்டி

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

20. விட்டமின்

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

21. லிப்ஸ்டிக் நீடிக்க..


21. லிப்ஸ்டிக் நீடிக்க..

முதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

22. மாற்று வழி..


22. மாற்று வழி..

லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

23. தவிர்க்கவும்


23. தவிர்க்கவும்

லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

24. லிப் லைனர்


24. லிப் லைனர்

லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

லிப்ஸ்டிக் போடும் போது லிப்ஸ்டிக்களின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டு விடும். அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப்லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.

25. நிறங்கள்


25. நிறங்கள்

சிவப்ப நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும், பிரவுன் நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு பிரவுன் லிப்லைனரும் உபயோகிக்கலாம்.

26. இப்படியும் செய்யலாம்


26. இப்படியும் செய்யலாம்

தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காக பயன்படுத்தலாம்.

மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.
Back to top Go down
View user profile http://tamilangadi.forumotion.com
 
உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா? இத சரியா பண்ணுனாலே போதுமே!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Tamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்-
Jump to: